#SLvsIND இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் ஆடும் இந்தியா

Published : May 10, 2021, 10:28 PM IST
#SLvsIND இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் ஆடும் இந்தியா

சுருக்கம்

இந்திய அணி ஜூலை மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.   

ஐபிஎல் 14வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் பாதியில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இந்திய வீரர்களை அடுத்த மாதம் மீண்டும் களத்தில் காணமுடியும். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணி ஆடுகிறது. 

ஜூன் 18 முதல் 22 வரை நடக்கிறது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதி போட்டி இங்கிலாந்தில் நடக்கிறது. அதன்பின்னர் ஆகஸ்ட் 14 முதல் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்தில் ஆடுகிறது.

இதற்கிடையே இலங்கைக்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது. ஜூலை 13 முதல் ஒருநாள் போட்டிகளும், ஜூலை 22ம் தேதி முதல் டி20 போட்டிகளும் நடக்கின்றன.

அதன்பின்னர் இங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் தொடரில் ஆடுகிறது இந்திய அணி. அதன்பின்னர் தான் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Devdutt Padikkal: நம்பர் 3 இடத்துக்கு நான் ரெடி! முதல் டெஸ்ட் சதத்தால் விவாதத்தை கிளப்பிய படிக்கல்
TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி