இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா..! சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர்கள் ரூ.30 கோடி நிதியுதவி

By karthikeyan VFirst Published May 10, 2021, 6:54 PM IST
Highlights

கொரோனாவை எதிர்கொள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர்கள் ரூ.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தேசியளவில் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழ்நாட்டில் தினமும் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்படுவதால் மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவிவருகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவிவருகிறது. ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவில் ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள கிரிக்கெட் வீரர்கள், ஐபிஎல் அணிகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடள்ஸ் உள்ளிட்ட அணிகள் நிதியுதவி செய்த நிலையில், சிஎஸ்கே அணி சார்பில் தமிழகத்திற்கு 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், அந்தவரிசையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர்களான சன் டிவி நெட்வொர்க் சார்பில் இந்தியாவில் கொரோனாவை எதிர்கொள்ள ரூ.30 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
 

click me!