#ENGvsIND 2வது டெஸ்ட்: ஒரு பந்துகூட ஆடாமல் களத்திலிருந்து வெளியேறிய இந்தியா - இங்கிலாந்து வீரர்கள்..!

By karthikeyan VFirst Published Aug 12, 2021, 4:06 PM IST
Highlights

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட்டில் டாஸ் போடப்பட்டு, இரு அணி வீரர்களும் களத்திற்கு வந்த நிலையில், மழையால் ஒரு பந்து கூட ஆடாமல் வீரர்கள் மீண்டும் பெவிலியனுக்கு திரும்பினர்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஜெயித்திருக்க வேண்டியது. கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கையில் 9 விக்கெட்டுகள் இருந்த நிலையில், வெற்றிக்கு வெறும் 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் மழையால் கடைசி நாள் ஆட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டதால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது. 

முதல் டெஸ்ட்டில் நழுவவிட்ட வெற்றியை, 2வது டெஸ்ட்டில் பெறும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. அதேவேளையில், முதல் போட்டியில் பின் தங்கியிருந்த இங்கிலாந்து அணியும் சுதாரித்துக்கொண்டதால், இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் பிற்பகல் 3 மணிக்கு டாஸ் போட்டு 3.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி, மழையால் 3.20 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 3.45 மணிக்கு தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ததையடுத்து, இரு அணி வீரர்களும் களத்திற்கு வந்தனர். சரியாக 3.45 மணிக்கு போட்டி தொடங்குவதாக இருந்ததால், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் - ராகுல் களத்திற்கு வந்தனர். இங்கிலாந்து வீரர்களும் களத்திற்கு வந்த நிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் ஓவரை வீச தயாரானார்.

ஆனால் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதையடுத்து, ஒரு பந்து கூட ஆடாமல், இரு அணி வீரர்களும் களத்தைவிட்டு பெவிலியனுக்கு திரும்பினர். முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் முதல் நாள் ஆட்டத்தின் தொடக்கமே மழையால் பாதிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மழை நின்றதையடுத்து, ஆட்டம் தொடங்கியது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா, சிராஜ்.

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஹசீப் ஹமீத், ஜோ ரூட்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, சாம் கரன், ஆலி ராபின்சன், மார்க் உட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 

click me!