#ENGvsIND இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம்..! இங்கிலாந்து அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Aug 12, 2021, 3:35 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஜெயித்திருக்க வேண்டியது. கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கையில் 9 விக்கெட்டுகள் இருந்த நிலையில், வெற்றிக்கு வெறும் 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் மழையால் கடைசி நாள் ஆட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டதால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது. 

முதல் டெஸ்ட்டில் நழுவவிட்ட வெற்றியை, 2வது டெஸ்ட்டில் பெறும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. அதேவேளையில், முதல் போட்டியில் பின் தங்கியிருந்த இங்கிலாந்து அணியும் சுதாரித்துக்கொண்டதால், இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் பிற்பகல் 3 மணிக்கு டாஸ் போட்டு 3.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி, மழையால் 3.20 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 3.45 மணிக்கு தொடங்குகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சீனியர் ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் அணியில் சேர்க்கப்படாத சீனியர் ஸ்பின்னர் அஷ்வின், இந்த போட்டிக்கான அணியிலும் எடுக்கப்படவில்லை.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா, சிராஜ்.

இங்கிலாந்து அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜாக் க்ராவ்லிக்கு பதிலாக ஹசீப் ஹமீத் சேர்க்கப்பட்டுள்ளார். டேனியல் லாரன்ஸுக்கு பதிலாக மொயின் அலியும், காயத்தால் விலகிய ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராடுக்கு பதிலாக மார்க் உட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஹசீப் ஹமீத், ஜோ ரூட்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, சாம் கரன், ஆலி ராபின்சன், மார்க் உட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 

click me!