டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணி..! 3 சதங்கள் விளாசிய முரட்டு வீரரை கழட்டிவிட்ட சோகம்

Published : Aug 12, 2021, 02:31 PM IST
டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணி..! 3 சதங்கள் விளாசிய முரட்டு வீரரை கழட்டிவிட்ட சோகம்

சுருக்கம்

டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் காலின் முன்ரோவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.  

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 தொடங்கி நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் மிகத்தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளின் மீது எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் வென்ற நியூசிலாந்து அணி, அந்த உத்வேகத்துடன் அடுத்த ஐசிசி கோப்பையை தூக்க தயாராகிவருகிறது.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் மார்டின் கப்டி, ஜிம்மி நீஷம், டிரெண்ட் போல்ட், மிட்செல் சாண்ட்னெர், டேரைல் மிட்செல், டெவான் கான்வே, இஷ் சோதி, டிம் சௌதிஆகிய வழக்கமான வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.

ஃபாஸ்ட் பவுலர்களான லாக்கி ஃபெர்குசன் மற்றும் கைல் ஜாமிசன் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3 சதங்களை விளாசி நியூசிலாந்து அணிக்கு பெரும் பங்காற்றியுள்ள அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேனான காலின் முன்ரோவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணி:

கேன் வில்லியம்சன்(கேப்டன்), மார்டின் கப்டில், டெவான் கான்வே, டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), ஜிம்மி நீஷம், டேரைல் மிட்செல், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, டாட் ஆஸ்டில், டிரெண்ட் போல்ட், கைல் ஜாமிசன், மார்க் சாப்மேன், லாக்கி ஃபெர்குசன், க்ளென் ஃபிலிப்ஸ், ஆடம் மில்னே.
 

PREV
click me!

Recommended Stories

Shubman Gill: விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும் சுப்மன் கில்.. எந்த டீம் தெரியுமா?
சுப்மன் கில் ஆடியே ஆகணும்.. அடம்பிடித்த கம்பீர், அகர்கர்.. தேர்வுக்குழுவில் எதிர்த்த 'அந்த' 2 பேர் யார்?