
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே தோற்றிருக்க வேண்டிய இங்கிலாந்து அணி, மழையால் கடைசி நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் தப்பியது. அதனால் தான் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது.
முதல் போட்டியில் மழையால் தப்பிய இங்கிலாந்து அணி, 2வது போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. எனவே 2வது டெஸ்ட் போட்டிக்கான அணி காம்பினேஷனை மாற்றும் முனைப்பில் உள்ளது இங்கிலாந்து அணி.
சீனியர் ஸ்பின் ஆல்ரவுண்டரான மொயின் அலியை அழைத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. எனவே 2வது டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன் ஜாக் க்ராவ்லி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் மொயின் அலி சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச இங்கிலாந்து அணி:
ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜோ ரூட்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சாம் கரன், மொயின் அலி, ஆலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.