India U19 Squad: அண்டர் 19 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..!

Published : Dec 20, 2021, 02:25 PM IST
India U19 Squad: அண்டர் 19 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..!

சுருக்கம்

அண்டர் 19 உலக கோப்பைக்கான 17 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

14வது அண்டர் 19 உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் வரும் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 5 வரை நடக்கவுள்ளது. 16 அணிகள் கலந்துகொள்ளும் இந்த அண்டர் 19 உலக கோப்பை தொடர் ஆண்டிகுவா & பார்புடா, கயானா, செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ், டிரினிடாட் &  டொபாகோ ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது.

2000, 2018, 2012 மற்றும் 2018 ஆகிய 4 முறை சாம்பியனான இந்தியா அண்டர் 19 அணி, க்ரூப் பி-யில் இடம்பெற்றுள்ளது. ஜனவரி 15ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்நிலையில், அண்டர் 19 உலக கோப்பைக்கான 17 வீரர்களை கொண்ட இந்தியா அண்டர் 19 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. யஷ் துல் தலைமையிலான அணியில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கேப்டன் யஷ்ஷுடன் சேர்த்து மொத்தம் 17 பேர். 5 வீரர்கள் ஸ்டாண்ட் பை வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அண்டர் 19 உலக கோப்பைக்கான இந்திய அணி:

யஷ் துல் (கேப்டன்), ஹர்னூர் சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, எஸ்.கே.ரஷீத் (துணை கேப்டன்), நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனீஷ்வர் கௌதம், தினேஷ் பானா (விக்கெட் கீப்பர்), ஆராத்யா யாதவ் (விக்கெட் கீப்பர்), ராஜ் அங்கத் பாவா, மானவ் பராக், கௌஷல் டாம்பே, ஆர்.எஸ்.ஹங்கர்கேகர், வாசு வட்ஸ், விக்கி ஆஸ்ட்வால், ரவிகுமார், கர்வ் சங்வான்.

ஸ்டாண்ட்பை வீரர்கள் - ரிஷித் ரெட்டி, உதய் சஹாரன், அன்ஷ் கோசாய், அம்ரித் ராஜ் உபாத்யாய், பிஎம் சிங் ரத்தோர்.
 

PREV
click me!

Recommended Stories

விராட் கோலி மேஜிக் இன்னிங்ஸ்.. புகழ்ந்து தள்ளிய பயிற்சியாளர்.. அட! இவரா இப்படி சொன்னது!
IND vs NZ: இது வேலைக்கு ஆகாது.. இந்திய அணியை வறுத்தெடுத்த ஜாம்பவான். கடும் விமர்சனம்!