
கடந்த சில தினங்களாக இந்தியாவின் ஹாட் டாபிக் விராட் கோலி தான். ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட்கோலி நீக்கப்பட்ட விதம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் அணியில் விராட் கோலி விலக்கு கேட்டுள்ளார் என்ற தகவல் பரவிய நிலையில், ஒருநாள் தொடரில் ஆடுவதை உறுதி செய்த விராட் கோலி, தன்னை தேர்வாளர்கள் கேப்டன்சியிலிருந்து நீக்கிய விதம், கங்குலியின் கருத்துக்கு முரணான கருத்து ஆகியவற்றை பிரஸ்மீட்டில் தெரிவிக்க, கோலி பற்றவைத்த தீ பற்றி எரிகிறது.
இவ்வளவு பரபரப்புக்கு இடையே, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 16ம் தேதி மும்பையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு புறப்பட்டுச்சென்றது.
அப்போது, பேருந்தில் சென்று விமான நிலையத்தில் இறங்கியதும், விராட் கோலி ரிப்போர்ட்டர்களிடம் தனது மகளை ஃபோட்டோ எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கு பின்னர், அனுஷ்கா ஷர்மா மகள் வாமிகாவுடன் வந்தார். கோலியின் கோரிக்கையை ஏற்று, அவரது மகளை கேமராமேன்கள் ஃபோட்டோ எடுக்கவில்லை.
விராட் கோலி மகளை ஃபோட்டோ எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகிவருகிறது.