#SLvsIND இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு..!

Published : Jun 07, 2021, 07:38 PM IST
#SLvsIND இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு..!

சுருக்கம்

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடவுள்ள நிலையில், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  

இந்திய அணி அடுத்த மாதம்(ஜூலை) இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

விராட் கோலி தலைமையிலான ரோஹித் சர்மா, ரஹானே ரிஷப் பண்ட், அஷ்வின், ஜடேஜா, பும்ரா, ஷம் ஆகிய மெயின் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றீல் ஆடுவதற்காக இங்கிலாந்து செல்கிறது.  

மெயின் வீரர்கள் இங்கிலாந்து செல்வதால் அடுத்த லெவல் இந்திய அணி வீரர்கள் இலங்கை செல்லவுள்ளனர். ஷிகர் தவான் அல்லது ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்,  இந்தியா - இலங்கை இடையேயான முழு தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. ஜூலை 13, 16, 18 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும், ஜூலை 21, 23, 25 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.
 

PREV
click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து