#ICCWTC ஃபைனல்: ஸ்விங் கண்டிஷனா இருந்தால் கோலி காலி..! நியூசி., முன்னாள் கேப்டன் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 7, 2021, 7:13 PM IST
Highlights

ஸ்விங் கண்டிஷனாக இருந்தால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விராட் கோலி திணறுவார் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் க்ளென் டர்னர் தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்தியா மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து ஆகிய அணிகளில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சிறப்பாக ஆடியாக வேண்டும். மயன்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட் ஆகிய சிறந்த வீரர்கள் இருந்தாலும், கோலி மற்றும் ரோஹித் முக்கியமான வீரர்கள். அனைவருமே சிறப்பாக ஆடினால் தான் போட்டியை ஜெயிக்க முடியும் என்றாலும், இந்திய அணி கோலி - ரோஹித்தை சற்று அதிகமாக சார்ந்திருக்கிறது.

எனவே கோலி சிறப்பாக ஆடியாக வேண்டும். ஆனால் கண்டிஷன் ஸ்விங்கிற்கு சாதகமாக இருந்தால் கோலி திணறுவார் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் க்ளென் டர்னர் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள க்ளென் டர்னர், கண்டிஷன் சீம் & ஸ்விங்கிற்கு சாதகமாக இருந்தால் கோலி திணறுவார். நியூசிலாந்தில் விராட் கோலி மற்றும் இந்திய வீரர்கள் திணறியிருப்பதை பார்த்திருக்கிறோம். இங்கிலாந்து கண்டிஷன் கிட்டத்தட்ட நியூசிலாந்து கண்டிஷனை போன்றே இருக்கும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் கண்டிஷன் முக்கிய பங்காற்றும் என்று க்ளென் டர்னர் தெரிவித்துள்ளார்.
 

click me!