டி20 உலக கோப்பையை அந்த 2 அணிகளில் ஒன்றுதான் வெல்லும்..! உறுதியாக அடித்து சொல்லும் டுப்ளெசிஸ்

By karthikeyan VFirst Published Jun 7, 2021, 3:58 PM IST
Highlights

டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று டுப்ளெசிஸ் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ளது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடக்கும் என்பது உறுதியாகவில்லை. ஆனால் அக்டோபருக்குள் நிலைமை சீரடைந்துவிடும் என்று நம்பப்படுவதால், டி20 உலக கோப்பையை இந்தியாவிலேயே நடத்துவதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது.

டி20 உலக கோப்பை எந்த நாட்டில் நடத்தப்படும் என்பது குறித்து ஐசிசி - பிசிசிஐ பேசி முடிவெடுக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் வலுவான அணிகளாக திகழ்கின்றன. உலக கோப்பை மிகக்கடுமையான போட்டிகள் நிறைந்தவைகளாக இருக்கும்.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபாஃப் டுப்ளெசிஸ், நடப்பு டி20 சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உலக கோப்பை நடக்கவுள்ள இந்தியா ஆகிய 2 அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என்று டுப்ளெசிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டுப்ளெசிஸ், சிறந்த ஃபயர்பவர் மற்றும் அனுபவம் ஆகியவற்றில் வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக உள்ளது. அனுபவம் வாய்ந்த பழைய சிறந்த வீரர்களை எல்லாம் வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் அணிக்குள் கொண்டுவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத ட்வைன் பிராவோ, ஆண்ட்ரே ரசல் ஆகிய ஆல்ரவுண்டர்களை டி20 அணியில் எடுத்துள்ளது.

எனவே வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதேபோலவே அபாரமான பேட்ஸ்மேன்கள், மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள், சிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர்கள் என ஒரு முழுமையான, அனுபவம் வாய்ந்த அணியாக திகழ்கிறது இந்திய அணி.  இங்கிலாந்தும் வலுவான அணியாகத்தான் உள்ளது. ஆனாலும் இந்தியா அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று டுப்ளெசிஸ் தெரிவித்துள்ளார்.
 

click me!