#NEDvsIRE ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார்.? கடைசி போட்டியில் அயர்லாந்தை சொற்ப ரன்களில் சுருட்டிய நெதர்லாந்து

Published : Jun 07, 2021, 05:47 PM IST
#NEDvsIRE ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார்.? கடைசி போட்டியில் அயர்லாந்தை சொற்ப ரன்களில் சுருட்டிய நெதர்லாந்து

சுருக்கம்

அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அந்த அணியை வெறும் 163 ரன்களுக்கு சுருட்டியது நெதர்லாந்து அணி.  

அயர்லாந்து அணி நெதர்லாந்துக்கு சென்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி, தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணியின் ஸ்கோர் வேகமெடுக்கவில்லை.

அயர்லாந்து அணியின் சீனியர் வீரர்களும் தொடக்க வீரர்களுமான கெவின் ஓ பிரயன் ரன்னே அடிக்காமலும், பால் ஸ்டெர்லிங் 4 ரன்னிலும் வெளியேறினர். கேப்டன் பால்பிர்னி 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹாரி டெக்டாரும் ஜார்ஜ் டாக்ரெலும் இணைந்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

டாக்ரெல் 40 ரன்னில் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த டெக்டார் 58 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் டெயிலெண்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, கடைசி ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அயர்லாந்து.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் 164 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது நெதர்லாந்து அணி.
 

PREV
click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து