தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா அடுத்தடுத்து முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் நிலையில் டீசண்டான ஸ்கோரை எட்டுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய அணியானது ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை தொடர்களில் விளையாடும் போது பேட்டிங்கில் சொதப்பி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 50 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
தற்போது அதே போன்று தான் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடி வருகிறது. இதுவரையில் நடைபெற்ற 7 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
undefined
போட்டியின் 2ஆவது ஓவரை கேசவ் மஹராஜ் வீசினார். அந்த ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய ரோகித் சர்மா 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3ஆவது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 5ஆவது பந்தில் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 3 ரன்னில் நடையை கட்டினார். அப்போது இந்திய அணி 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு வந்த அக்ஷர் படேல் தனது பொறுப்பை உணர்ந்து விளையாடி வருகிறார்.
அவ்வப்போது சிக்ஸரும் விளாசி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார். தற்போது வரையில் 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் கேசவ் மஹராஜ் 2 விக்கெட்டும், கஜிசோ ரபாடா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.