ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் ஆடிப்பார்ப்போம் என்று துணிச்சலாக பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே ஏன் பேட்டிங் எடுத்தோம் என்று நினைக்கும் அளவிற்கு இந்திய வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கோல்டன் டக்கில் ஆட்டமிழந்து விராட் கோலி மோசமான சாதனை!
அடுத்து வந்த விராட் கோலி கோல்டன் டக் முறை ஆட்டமிழந்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்துள்ளார். இவரைத் தொடர்ந்து வந்த ஷிவம் துபே 1 ரன்னில் வெளியேற, கடைசி வாய்ப்பாக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அவர், நிலைத்து நின்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.
கடைசியா கிடைச்ச வாய்ப்பு – கோல்டன் டக்கில் வெளியேறிய சஞ்சு சாம்சன்: என்ன கொடுமை சார் இது?
அதன் பிறகு ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரும் பெங்களூருவில் சிக்ஸர் மழை பொழிந்தனர். ஆரம்பத்தில் ஒரு ரன் எடுக்க தடுமாறிய ரோகித் சர்மாவிற்கு தான் அடித்த பவுண்டரிக்கு லெக் பைஸ் கொடுக்கப்பட்டது. முதல் 2 டி20 போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தார்.
முதல் ஓவரிலேயே நடந்த குளறுபடி – அரே விரூ பந்து பேட்டில் பட்டத பாக்கலயா? ரோகித் சர்மா கேள்வி!
ஆனால், அதையெல்லாம் இன்று தனது சிறப்பான பேட்டிங் மற்றும் வரலாற்று சாதனையால் மாற்றியமைத்துள்ளார். விக்கெட்டுகள் விழ, விழ பொறுமையாக விளையாடிய ரோகித் சர்மா முதலில் 41 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் தனது 30ஆவது அரைசதத்தை நிறைவு செய்தார். அதன் பிறகு 28 பந்துகளில் 71 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
முதல் ஓவரிலேயே நடந்த குளறுபடி – அரே விரூ பந்து பேட்டில் பட்டத பாக்கலயா? ரோகித் சர்மா கேள்வி!
ரோகித் சர்மா 64 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார். மேலும், 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இவரைப் போன்று அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் மட்டும் தொடர்ந்து ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க ரிங்கு சிங் 39 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 69 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோகித் சர்மா 69 பந்துகளில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 121 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.