டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கோல்டன் டக்கில் ஆட்டமிழந்து விராட் கோலி மோசமான சாதனை!

By Rsiva kumar  |  First Published Jan 17, 2024, 8:40 PM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி முதல் முறையாக கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார்.


இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் இந்த முறை பேட்டிங் தேர்வு செய்தார். முதல் 2 டி20 போட்டிகளில் டாஸ் ஜெயிச்சு பீல்டிங் தேர்வு செய்தார். அந்த 2 போட்டியிலும் வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

கடைசியா கிடைச்ச வாய்ப்பு – கோல்டன் டக்கில் வெளியேறிய சஞ்சு சாம்சன்: என்ன கொடுமை சார் இது?

Tap to resize

Latest Videos

அதன் பிறகு ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஃபரீத் அகமது மாலிக் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலியிடம் கேப்டன் ரோகித் சர்மா மைதானத்தில் வைத்து ஏதோ சொல்ல, அடுத்த பந்திலேயே கோலி கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

முதல் ஓவரிலேயே நடந்த குளறுபடி – அரே விரூ பந்து பேட்டில் பட்டத பாக்கலயா? ரோகித் சர்மா கேள்வி!

இதன் மூலமாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக விராட் கோலி கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்துள்ளார். ஆனால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5ஆவது முறையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்துளார். இதே போன்று சஞ்சு சாம்சனும் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் ஓவரிலேயே நடந்த குளறுபடி – அரே விரூ பந்து பேட்டில் பட்டத பாக்கலயா? ரோகித் சர்மா கேள்வி!

click me!