விராட் கோலி, ரஹானேவை நம்பியிருக்கும் இந்தியா – 4ஆம் நாள் முடிவில் 164 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Jun 10, 2023, 11:19 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 4ஆம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது.


இந்தியாவிற்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது.

தரையோடு அள்ளி ஏமாத்திய க்ரீன்: சுப்மன் கில்லிற்காக நடுவரிடம் வாக்குவாதம் செய்த ரோகித் சர்மா!

Tap to resize

Latest Videos

பின்னர் இந்தியா தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், சுப்மன் கில் சர்ச்சையான முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 43 ரன்களில் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே புஜாராவும் 27 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே இருவரும் இணைந்து நிதானமாக ரன்கள் சேர்த்தனர்.

ஓபனராக 13,000 ரன்களை கடந்த 3ஆவது வீரரான ரோகித் சர்மா!

இந்தப் போட்டியில் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளார். தற்போது வரையில் அவர் 2037 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 3630 ரன்களும், விவிஎஸ் லட்சுமணன் 2434 ரன்களும், ராகுல் டிராவிட் 2143 ரன்களும், சட்டேஷ்வர் புஜாரா 2074 ரன்களும் எடுத்துள்ளனர்.

பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை 2023 ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

click me!