அடி மேல் அடி வாங்கி போராடி வரும் இந்தியா – 2ஆம் நாள் முடிவில் இந்தியா எடுத்தது 151 ரன்கள், 5 விக்கெட்!

By Rsiva kumarFirst Published Jun 8, 2023, 11:01 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் இறுதிப் போட்டியில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து போராடி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் இந்தியா டாஸ் வென்றது. ஆனால், பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 327 ரன்கள் குவித்தது. பின்னர் 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 429 ரன்கள் குவித்தது.

ஒரே மாதிரியாக ஆட்டமிழந்த கில், புஜாரா: வைரலாகும் கார்பன் காபி புகைப்படம்!

பின்னர், ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். சரி, அவர் தான் ஆட்டமிழந்துவிட்டார், சுப்மன் கில் இருக்கிறார் என்று சந்தோஷப்பட்ட நிலையில், அவரும் 13 ரன்களில் கிளீன் போல்டானார். ஒருகட்டத்தில் 30 ரன்களில் இந்தியா 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதுமட்டுமின்றி 6.4 ஓவர்களில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

என்ன சோனமுத்தா போச்சா: டுவிட்டரில் தாறுமாறாக வைரலாகும் ”ஜோக்கர்” ரோகித் சர்மா மீம்ஸ்!

அதன் பிறகு சட்டேஷ்வர் புஜரா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்தனர். ஆனால், புஜாரா 14 ரன்களாக இருந்த போது கில் ஆட்டமிழந்ததைப் போன்று ஒரே மாதிரியாகவே ஆட்டமிழந்துள்ளார். விராட் கோலியும் 14 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த அஜிங்கியா ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜா நிலைத்து நின்று ரன்கள் சேர்த்தனர். எனினும், ரவீந்திர ஜடேஜா எளிதான பந்தில் 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 100ஆவது கேட்சை பிடித்து ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் ஆக்கிய ரஹானே!

அடுத்து வந்த விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் 14 பந்துகள் பிடிப்பதற்குள்ளாக மார்பு, முழங்கைப் பகுதியில் காயம் ஏற்பட்டார். இதே போன்று அஜிங்கியா ரஹானேவிற்கு கையில் காயம் ஏற்பட்டு பேண்டேஜ் போடப்பட்டது. அடுத்து தலையிலும் காயம் ஏற்பட்டது. இப்படி அடிமேல் அடி வாங்கி இந்திய வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கேஎஸ் பரத் 5 ரன்னுடனும், அஜிங்கியா ரஹானே 29 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். 2 நாட்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. பாலோ ஆன் தவிர்க்க இந்தியா இன்னும் 118 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் டிராபியுடன் ஆந்திரா முதல்வரை சந்தித்த அம்பத்தி ராயுடு, சிஎஸ்கே உரிமையாளர்!

 

Stumps on Day 2.

India still needs 118 runs to avoid the follow-on with 5 wickets in hand, Rahane & Jadeja played a vital knock when India was in the danger zone. pic.twitter.com/TcUNNf4nX0

— Johns. (@CricCrazyJohns)

 

click me!