இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பீடு முழு பட்டியல்.. மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்

By karthikeyan VFirst Published May 23, 2020, 7:44 PM IST
Highlights

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பீட்டை பார்ப்போம். 
 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், 2020-2021ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அதிர்ச்சியளிக்கும் விதமாக வஹாப் ரியாஸ், முகமது ஆமீர் மற்றும் ஹசன் அலி ஆகிய அனுபவ, முன்னணி வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

இளம் வீரரான ஷாஹீன் ஷா அஃப்ரிடி, உயர் பிரிவான ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளார். ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், இமாத் வாசிம், நசீம் சா, இஃப்டிகார் அகமது, அபித் அலி, முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது ஆகியோரும் ஒப்பந்த பட்டியலில் உள்ளனர். 

ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.62.44 லட்சமும், பி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.42.57 லட்சமும், சி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ.31.22 லட்சமும் ஊதியமாக வழங்கப்படுகிறது.

பிரிவு வாரியாக இடம்பெற்றுள்ள வீரர்களை பார்ப்போம்.

ஏ பிரிவு(ரூ.62.44 லட்சம்) - பாபர் அசாம், அசார் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி.

பி பிரிவு(ரூ.42.57 லட்சம்) - ஆசாத் ஷாஃபிக், ஹாரிஸ் சொஹைல், முகமது அப்பாஸ், ஷதாப் கான், அபித் அலி, முகமது ரிஸ்வான், சர்ஃபராஸ் அகமது, ஷான் மசூத், யாசிர் ஷா.

சி பிரிவு(ரூ.31.22 லட்சம்) - ஃபகர் ஜமான், இமாத் வாசிம், இமாம் உல் ஹக், நசீம் ஷா, இஃப்டிகார் அகமது, உஸ்மான் ஷின்வாரி.

பாகிஸ்தான் வீரர்களின் அதிகபட்ச ஆண்டு ஊதியமே ரூ.62.44 லட்சம் தான். ஆனால் இந்திய வீரர்களின் குறைந்தபட்ச ஊதியமே ரூ.1 கோடி. அதிகபட்ச ஊதியம் ரூ.7 கோடி. இரு அணி வீரர்களுக்குமான ஊதிய வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையேயான வித்தியாசத்தை போன்றதுதான். ஆனால், சர்வதேச அளவில் மிகப்பணக்கார கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ தான். பிசிசிஐ-யின் வருமானமும் அதிகம். இந்திய அணி ஆடும் போட்டிகளுக்கான வியாபாரமும் அதிகம். அந்தவகையில், இந்த வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். இது நிதர்சனமானது.

இந்திய வீரர்களை பிசிசிஐ 4 பிரிவுகளாக பிரிக்கிறது. ஏ+, ஏ, பி, சி என நான்கு பிரிவுகளாக பிரிக்கிறது. ஏ+ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம். ஏ பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடி, பி பிரிவு வீரர்களுக்கு ரூ.3 கோடி, சி பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது.

ஏ+ பிரிவு வீரர்கள்(ரூ.7 கோடி)விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா.

ஏ பிரிவு வீரர்கள்(ரூ.5 கோடி) - அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே, கேஎல் ராகுல், ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட்.

பி பிரிவு வீரர்கள்(ரூ.3 கோடி) - ரிதிமான் சஹா, உமேஷ் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, மயன்க் அகர்வால்.

சி பிரிவு வீரர்கள்(ரூ.1 கோடி) - கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், மனீஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, ஷர்துல் தாகூர், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர்.
 

click me!