ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், 2 டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் இந்தூர் மற்றும் அகமதாபாத்தில் நடக்கவுள்ளன. அந்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியும், அதைத்தொடர்ந்து நடக்கவுள்ள 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 17, 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் முறையே மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் நடக்கின்றன. இந்த ஒருநாள் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் மட்டும் ரோஹித் சர்மா ஆடவில்லை. அதனால் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுகிறார்.
கடைசி 2 போட்டிகளிலும் ரோஹித் சர்மா ஆடுவதால், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படுவார். ஷுப்மன் கில், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷன் ஆகிய பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், அக்ஸர் படேல் ஆகியோர் ஆடுகின்றனர்.
ஜடேஜா, அக்ஸர் படேல், சுந்தர் ஆகியோருடன் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் ஆடுகின்றனர். ஃபாஸ்ட் பவுலர்களாக ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் ஜெய்தேவ் உனாத்கத் ஆகியோர் ஆடுகின்றனர்.
இந்திய ஒருநாள் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், சாஹல், ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக், ஜெய்தேவ் உனாத்கத்.