பும்ரா ஃபிட்னெஸ் குறித்து ராகுல் டிராவிட் சொன்ன முக்கியமான அப்டேட்

By karthikeyan VFirst Published Oct 1, 2022, 8:12 PM IST
Highlights

காயத்தால் இந்திய அணியில் ஆடமுடியாமல் அவதிப்பட்டுவரும் ஜஸ்ப்ரித் பும்ராவின் ஃபிட்னெஸ் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கியமான அப்டேட்டை கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், காயத்தால் தென்னாப்பிரிக்க தொடரில் ஆடமுடியாமல் விலகிய இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா டி20 உலக கோப்பையில் ஆடுவாரா என்பதே பெரிய கேள்வியாக இருந்துவருகிறது.

முதுகுப்பகுதியில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து விலகி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார் பும்ரா. பும்ராவின் இந்த காயம் சரியாக 6 மாதமாவது ஆகும் என்று தெரிகிறது. எனவே பும்ரா டி20 உலக கோப்பையில் ஆட வாய்ப்பேயில்லை.

இதையும் படிங்க - IND vs SA: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

வலி நிவாரணி எடுத்துக்கொண்டு ஆடலாம். ஆனாலும் அவரால் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. மேலும் அப்படி ஆடினால் அவரது காயம் தீவிரமடைய வாய்ப்புள்ளது. எனவே பும்ரா விஷயத்தில் பிசிசிஐ பொறுமை காக்கவேண்டும் என்று ஐசிசி மருத்துவர் தெரிவித்தார்.

ஆனால் இதுவரை பும்ரா டி20 உலக கோப்பையில் ஆடுவாரா இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. பும்ராவின் ஃபிட்னெஸை கண்காணித்துவரும் மருத்துவர் குழுவில் ரிப்போர்ட்டுக்காக இந்திய அணி நிர்வாகமும் பிசிசிஐயையும் காத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் 2-3 நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

இதுவரை டி20 உலக கோப்பையிலிருந்து பும்ரா விலகவில்லை என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க - PAK vs ENG: அம்பயரை பதம்பார்த்த ஹைதர் அலியின் ஷாட்..! வைரல் வீடியோ

இந்நிலையில், பும்ராவின் ஃபிட்னெஸ் குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பும்ரா இதுவரை டி20 உலக கோப்பையிலிருந்து விலகவில்லை. தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து மட்டுமே நீக்கப்பட்டிருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கும் பும்ராவின் உடல்நிலை குறித்த அடுத்தகட்ட அப்டேட்டுக்காக காத்திருக்கிறோம். அதன்பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து யோசிக்கவேண்டும். அடுத்த சில தினங்களில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கவேண்டும். அதன்பின்னரே பும்ரா குறித்த அப்டேட்டை கூறமுடியும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
 

click me!