டி20 உலக கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து

By karthikeyan VFirst Published Nov 7, 2022, 9:35 PM IST
Highlights

டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து கூறியுள்ளார். 
 

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

க்ரூப் 1ல் முதலிடம் பிடித்த நியூசிலாந்து மற்றும் க்ரூப் 2ல் 2ம் இடம்பிடித்த பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி வரும் 9ம் தேதி சிட்னியில் நடக்கிறது. க்ரூப் 2ல் முதலிடம் பிடித்த இந்தியா மற்றும் க்ரூப் 1ல் 2ம் இடம்பிடித்த இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி வரும் 10ம் தேதி அடிலெய்டிலும் நடக்கிறது. 

IPL 2023: உங்க டைம் முடிந்தது பொல்லார்டு.. நீங்க கிளம்பலாம்! 12 வீரர்களை கொத்தா கழட்டிவிடும் மும்பை இந்தியன்ஸ்

இந்தியா - இங்கிலாந்து இடையே அடிலெய்டில் நடக்கும் அரையிறுதி போட்டி கடும் போட்டியாக இருக்கும். இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியை அடிலெய்டில் தான் ஆடியது என்பதால் அந்த கண்டிஷனும், ஆடுகளத்தின் தன்மையும் இந்திய அணிக்கு நன்றாக தெரியும். அது இந்திய அணிக்கு கூடுதல் பலம். மேலும் அடிலெய்ட் விராட் கோலிக்கு மிகவும் பிடித்த ஆடுகளம். அடிலெய்டில் ஆடினாலே கோலி அடித்து நொறுக்கிவிடுவார்.  அது இந்திய அணிக்கு மேலும் பலம் சேர்க்கக்கூடிய விஷயம்.

T20 World Cup: இவர் சரிப்பட்டு வரமாட்டார்.. அரையிறுதியில் அவரை ஆடவைங்க! இந்திய அணிக்கு கபில் தேவ் அட்வைஸ்

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி குறித்து பேசியுள்ள ரோஹித் சர்மா, கண்டிஷனுக்கு ஏற்ப விரைவில் மாறுவதுதான் முக்கியம். அண்மையில் தான் அடிலெய்டில் ஆடினோம். இங்கிலாந்தை எதிர்கொள்வது உண்மையாகவே பெரும் சவால் தான். அவர்கள் நன்றாக ஆடிவருகிறார்கள். ஒவ்வொரு வீரரின் ரோலும் அவர்களுக்கு தெரியும். அதை புரிந்துகொண்டு இதுவரை செயல்பட்டதுபோலவே செயல்படவேண்டும். இது அதிக அழுத்தம் கொண்ட போட்டியாகும். நாம் நன்றாக ஆடியாக வேண்டும். சூழலுக்கு ஏற்ப மாறி, அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
 

click me!