T20 WC: ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரில் அரையிறுதியில் ஆடப்போகும் விக்கெட் கீப்பர் யார்? ரோஹித் பதில்

By karthikeyan V  |  First Published Nov 9, 2022, 6:26 PM IST

டி20 உலக கோப்பையில் நாளை இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரில் யார் விக்கெட் கீப்பராக ஆடவுள்ளார் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெளிவுபடுத்தியுள்ளார்.
 


டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் முன்னேறிய நிலையில், இன்று சிட்னியில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது அரையிறுதி போட்டி நாளை அடிலெய்டில் நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி காம்பினேஷன் குறித்த சில கேள்விகள் உள்ளன. விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரில் யார் ஆடுவார், சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விகள் உள்ளன. இதில் முக்கியமான கேள்வி, தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரில் யார் என்பதுதான்.

Latest Videos

undefined

ஐபிஎல் 2023: கொச்சியில் ஐபிஎல் ஏலம்..! கூடுதல் தொகையால் குதூகலத்தில் ஐபிஎல் அணிகள்

இந்த உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் தான் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக ஆடினார். சூப்பர் 12 சுற்றின் முதல் 4 போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் தான் ஆடினார். பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்காமல் படுமோசமாக சொதப்பிய தினேஷ் கார்த்திக்கின் விக்கெட் கீப்பிங்கும் சராசரிதான். 

தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக இந்திய அணி விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டைத்தான் ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் கருத்து கூறினர். அதற்கேற்ப தினேஷ் கார்த்திக்கும் சொதப்ப, ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு ஆட வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே அரையிறுதி போட்டியில் யார் ஆடுவார் என்ற கேள்வி எழுந்தது. 

T20 WC: பாபர் அசாம் - ரிஸ்வான் அரைசதம்.. அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது பாகிஸ்தான்

இந்நிலையில், நாளை அரையிறுதியில் ஆடவுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கேப்டன் ரோஹித் சர்மா, ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 12 சுற்று போட்டியில் ஆடியபோது எந்த அணியை நாங்கள் அரையிறுதியில் எதிர்கொள்வோம் என்று தெரியவில்லை. எனவே எதிரணி ஸ்பின்னர்களை எதிர்கொள்ள பேட்டிங் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதால் ரிஷப் பண்ட் ஆடினார். அரையிறுதிக்கு இருவருமே தயாராக இருக்க வேண்டும். அதற்கு ரிஷப் பண்ட்டுக்கு கேம் டைம் வேண்டும் என்பதால் தான் அவர் ஆடவைக்கப்பட்டார். நாளை யார் ஆடுவார் என்பதை இப்போதே என்னால் சொல்ல முடியாது என்றார் ரோஹித் சர்மா.
 

click me!