IND vs SA: பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங்; பேட்டிங்கில் ராகுல், சூர்யகுமார் அசத்தல்! முதல் டி20யில் இந்தியா வெற்றி

By karthikeyan VFirst Published Sep 29, 2022, 9:43 AM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்..! ஆஸி., லெஜண்ட் மார்க் வாக் அதிரடி தேர்வு

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். டி காக்(1), ரூசோ (0) ஆகியோர் அர்ஷ்தீப் சிங்கிடம் தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடக்க வீரராக இறங்கிய கேப்டன் பவுமாவும் தீபக் சாஹரின் பவுலிங்கில் டக் அவுட்டானார்.

அதன்பின்னர் மார்க்ரம் நிலைத்து ஆடி 25 ரன்கள் அடித்தார். ஆனால் மில்லர் மற்றும் டிரிஸ்டான் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் ரன்னே அடிக்காமல் முறையே அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாஹரின் பவுலிங்கில் டக் அவுட்டாகி வெளியேறினர். பின்வரிசையில் பர்னெல் 24 ரன்களும், மஹராஜ் 41 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 106 ரன்கள் அடித்தது தென்னாப்பிரிக்கா.

107 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா ரன்னே அடிக்காமலும், கோலி 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் தொடக்க வீரர் ராகுலும், செம ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவும் இணைந்து அபாரமாக பேட்டிங்  ஆடி இருவருமே அரைசதம் அடித்து 17வது ஓவரில் இலக்கை எட்டி ஆட்டத்தை முடித்தனர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்த 4 அணிகள் தான் மோதும்..! இங்கிலாந்து அதிரடி வீரரின் ஆருடம்

ராகுல் 56 பந்தில் 51 ரன்களும், சூர்யகுமார் 33 பந்தில் 50 ரன்களும் அடிக்க, 17வது ஓவரில் இலக்கை  எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 3 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

click me!