IND vs NZ: ஈசியான இலக்கை கஷ்டப்பட்டு அடித்து இந்தியா வெற்றி..!

By karthikeyan VFirst Published Jan 29, 2023, 10:30 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-1 என தொடரை சமன் செய்தது.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி லக்னோவில் இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியிலும் ஜெயித்து டி20 தொடரை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணியும், இந்த போட்டியில் ஜெயித்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் அணியில் சேர்க்கப்பட்டார்.

Womens U19 T20 World Cup: ஃபைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் டி20 உலக கோப்பையை வென்று இந்திய அணி சாதனை

இந்திய அணி:

ஷுப்மன் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங்.

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, லாக்கி ஃபெர்குசன், பிளைர் டிக்னெர்.

முதலில் பேட்டிங் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் தலா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மார்க் சாப்மேன் 14 ரன்களுக்கும், க்ளென் ஃபிலிப்ஸ் 5 ரன்களுக்கும், டேரைல் மிட்செல் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மைக்கேல் பிரேஸ்வெல்லும் 14 ரன்கள் மட்டுமே அடித்தார். கேப்டன் மிட்செல் சாண்ட்னெர் 19 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடக்கம் முதலே நியூசிலாந்தை ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்திய இந்திய பவுலர்கள், 99 ரன்களுக்கு சுருட்டினர்.

100 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணி விரட்டினாலும், அதை எளிதாக அடிக்கவில்லை. ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்ததால், அதை பயன்படுத்தி நியூசிலாந்து ஸ்பின்னர்கள் மிட்செல் சாண்ட்னெர், பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோருடன் க்ளென் ஃபிலிப்ஸும் இணைந்து இந்திய அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தியதுடன் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை செய்யுங்க..! ரோஹித், டிராவிட்டுக்கு தாதா தரமான அறிவுரை

ஷுப்மன் கில் (11), இஷான் கிஷன்(19), ராகுல் திரிபாதி(13), வாஷிங்டன் சுந்தர் ஆகிய நால்வரும் பதின் ரன்களில் ஆட்டமிழந்தனர். இலக்கு எளிதானது என்பதால் அவசரப்படாமல் நிதானமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 ரன்கள் அடித்து கடைசி வரை நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-1 என தொடரை சமன் செய்தது. 
 

click me!