IND vs NZ: 2வது டி20 போட்டியில் வெறும் 99 ரன்களுக்கு நியூசிலாந்தை சுருட்டியது இந்தியா..!

By karthikeyan VFirst Published Jan 29, 2023, 9:24 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அந்த அணியை வெறும் 99 ரன்களுக்கு சுருட்டிவிட்டு, 100 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி லக்னோவில் இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியிலும் ஜெயித்து டி20 தொடரை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணியும், இந்த போட்டியில் ஜெயித்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கியுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ஷுப்மன் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங்.

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, லாக்கி ஃபெர்குசன், பிளைர் டிக்னெர்.

முதலில் பேட்டிங் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் தலா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மார்க் சாப்மேன் 14 ரன்களுக்கும், க்ளென் ஃபிலிப்ஸ் 5 ரன்களுக்கும், டேரைல் மிட்செல் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மைக்கேல் பிரேஸ்வெல்லும் 14 ரன்கள் மட்டுமே அடித்தார். கேப்டன் மிட்செல் சாண்ட்னெர் 19 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடக்கம் முதலே நியூசிலாந்தை ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்திய இந்திய பவுலர்கள், 99 ரன்களுக்கு சுருட்டினர்.

இந்திய அணி 100 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிவருகிறது.
 

click me!