Latest Videos

குல்தீப் சுழல், பும்ரா, அர்ஷ்தீப் சிங் வேகத்திற்கு திணறிய வங்கதேசம் 146 ரன்களுக்கு சரண்டர், இந்தியா வெற்றி!

By Rsiva kumarFirst Published Jun 23, 2024, 12:20 AM IST
Highlights

வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்று போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா 50 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் கடின இலக்கை துரத்திய வங்கதேச அணியானது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. லிட்டன் தாஸ் மற்றும் தன்ஷித் ஹசன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், லிட்டன் தாஸ் 13 ரன்களில் ஹர்திக் பாண்டியா ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு தன்ஷித் ஹசனும் 29 ரன்களில் வெளியேறினார். தவ்ஹித் ஹிரிடோய் 4 ரன்னில் வெளியேற, ஷாகிப் அல் ஹசன் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ நிதானமாக விளையாடி 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசியில் ஜாக்கர் அலி 1, ரிஷாத் ஹூசைன் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மஹ்மதுல்லா 13 ரன்கள் சேர்த்து நடையை கட்டினார். இறுதியாக வங்கதேச அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 16 ரன்கள் எடுத்தது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் எடுத்தார். நாளை காலை நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் வீழ்த்தினால் இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!