மொஹாலியில் நடந்த ஆப்கானிஸ்தானிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக ரன்கள் சேர்த்தனர். குர்பாஸ் 23 ரன்களில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இப்ராஹிம் ஜத்ரன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹ்மத் ஷா 3 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய முகமது நபி, அஸ்மதுல்லா உமர்சாய் உடன் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.
கடைசில பயம் காட்டிய நபி, அசால்ட்டா தூக்கிய முகேஷ் குமார் – ஆப்கானிஸ்தான் 158 ரன்கள் குவிப்பு!
கடைசியாக நபி 42 ரன்கள் குவிக்க ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில், முகேஷ் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஷிவம் துபே ஒரு விக்கெட் கைப்பற்றினார். பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ரன் அடித்து விட்டு ஓடி வந்த நிலையில் எதிர் திசையில் நின்றிருந்த சுப்மன் கில் ஓடி வராத நிலையில் ரோகித் சர்மா ரன் அவுட்டானார். 14 மாதங்களுக்கு பிறகு டி20 போட்டியில் விளையாடிய ரோகித் சர்மாவிற்கு இது ஏமாற்றத்தையும், கோபத்தையும் கொடுத்தது. அதன் பிறகு சுப்மன் கில்லை வசைபாடிக் கொண்டே வெளியேறினார்.
மொஹாலியில் கடும் குளிர் – ஹாட் வாட்டர் பேக் பயன்படுத்திய இந்திய வீரர்கள்!
இவரைத் தொடர்ந்து திலக் வர்மா களமிறங்கினார். அவர், 22 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆல் ரவுண்டர் ஷிவம் துபே களமிறங்கினார். தனது ஹோம் மைதானத்தில் விளையாடிய சுப்மன் கில் 23 ரன்களில் வெளியேறினார். துபே உடன் ஜித்தேஷ் சர்மா இணைந்து நிதானமாக ரன்கள் குவித்தார். தனக்கி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட துபே 40 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 60 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஜித்தேஷ் சர்மா 31 ரன்களில் வெளியேற ரிங்கு சிங் 16 ரன்கள் சேர்த்தார். கடைசியாக இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
India vs Afghanistan T20I: யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏன் இடம் பெறவில்லை? இதோ வெளியான காரணம்!
இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக டி20 போட்டியில் 100 வெற்றிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.