ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்களை சேர்த்த நிலையில் இந்தியி அணி 5 விக்கெட்டுகளை இழந்து ஃபாலோ ஆன்ஐ தவிர்க்க போராடி வருகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடி அணியின் ரன் கணக்கை கச்சிதமாக உயர்த்தினர். மற்றொருபுறம் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்மித் 140 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இறுதியில் முதல் இன்னிங்சில் அந்த அணி 474 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.
முக்கியமான தருணத்தில் முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே பேரிடியாக அமைந்தது. கடந்த போட்டியில் மிடில் ஆர்டரில் களம் இறங்கிய ரோகித் ஷர்மா இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். ஆனால் 3 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் தவறான ஷாட்டால் ரோகித் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஜெஸ்வாலைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை.
undefined
இதனால் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதனைத் தொடர்ந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இந்திய அணி (Team India) ஃபாலோ ஆன்.ஐ தவிர்க்க வேண்டும் என்றால் 275 ரன்கள் சேர்க்க வேண்டும். இந்திய அணி சார்பில் ஜெஸ்வால் 82 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆனார்.
மேலும் கோலி 36 ரன்களும், கே.எல்.ராகுல் 24 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர். தற்போது ரிஷப் பண்ட் 6 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். காபா மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் மழையின் குறுக்கீட்டால் இந்திய அணியின் தோல்வி தவிர்க்கப்பட்டு போராடி டிரா செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஃபாலோ ஆனை தவிர்க்க இன்னும் 111 ரன்கள் தேவை என்ற நிலையில், இதனை இந்திய அணி சமாளிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.