மும்பை வாங்கடே மைதானத்தில் கடைசியாக நடந்த 7 டி20 போட்டிகளில் இந்தியா 240 ரன்கள் மற்றும் தென் ஆப்பிரிக்கா 209 ரன்கள் அதிகபட்சமாக குவித்துள்ளன.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மூன்று டி20 போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியாக கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.
சிக்சரா விளாசிய இஷான் கிஷான், அக்ஷர் படேல், தீபக் கூடா: இந்தியா 162 ரன்கள் குவிப்பு!
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இதில், இஷான் கிஷான் 39 ரன்களும், ஹர்திக் பாண்டியா 29 ரன்களும், தீபக் கூடா 41 ரன்களும், அக்ஷர் படேல் 31 ரன்களும் அதிகபட்சமாக எடுத்துள்ளனர். இவர்களைத் தவிர சுப்மன் கில் 7 ரன்களும், சஞ்சு சாம்சன் 5 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சில் இலங்கை அணி தரப்பில் தில்சன் மதுசங்கா, மஹீத் தீக்ஷனா, சமீகா கருணாரத்னே, தனஞ்ஜெயா டி சில்வா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.
First T20: முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சுப்மன் கில் 7 ரன்களில் அவுட்!
இதுவரையில் மும்பை வாங்கடே மைதானத்தில் எத்தனையோ டி20 போட்டிகள் நடந்திருந்தாலும், இங்கு கடைசியாக நடந்த 7 டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகள் மட்டுமே அதிகபட்சமாக 240 மற்றும் 209 ரன்கள் குவித்துள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. இதே போன்று கடந்த 2019 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கண்டத்திலிருந்து தப்பித்து இன்னொரு கண்டத்தில் சிக்கிய சஞ்சு சாம்சன்!