இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்தப் போட்டியின் மூலம் சுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவி ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர். முதல் ஓவரிலேயே இஷான் கிஷான், ஒரு சிக்சர், 2 பவுண்டரி, 2 ரன்கள் எடுக்க கூடுதலாக வைடு கிடைக்க மொத்தமாக 17 ரன்கள் கிடைத்தது. இதையடுத்து அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய சுப்மன் கில் அடுத்து 3 ரன்கள் கூடுதலாக எடுத்து 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
First T20: முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சுப்மன் கில் 7 ரன்களில் அவுட்!
இவரைத் தொடர்ந்து வந்த மிஸ்டர் 360 டிகிரி என்று சொல்லப்படும் சூர்யகுமார் யாதவ் ஒரு பவுண்டரி அடித்து 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து வந்த இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் உள்பட 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் கைக்கு சென்றது. பந்து பேட்டில் படுவது தெளிவாக கேட்டும் ஹர்திக் பாண்டியா வெளியேறாமல் இருந்தார். அம்பயர் அவுட் கொடுக்கவே அதன் பிறகு வெளியேறினார். அதுமட்டுமின்றி சுழல் பந்தில் யார்க்கர் போடும் போது அதனை தடுக்க முயற்சித்து குப்புற விழுந்த காட்சி கிரிக்கெட் பார்த்தவர்களை விமர்சிக்க வைத்தது.
ஒரு கண்டத்திலிருந்து தப்பித்து இன்னொரு கண்டத்தில் சிக்கிய சஞ்சு சாம்சன்!
இஷான் கிஷானும் 29 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 39 ரன்களில் வெளியேறினார். இறுதியாக ஜோடி சேர்ந்த தீபக் கூடா மற்றும் அக்ஷர் படேல் இலங்கை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் 36 பந்துகளில் 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். தீபக் கூடா 23 பந்துகளில் 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரி உள்பட 41 ரன்கள் சேர்த்தார். இதே போன்று அக்ஷர் படேல் 20 பந்துகளில் ஒரு சிக்சர் 3 பவுண்டரிகள் உள்பட 31 ரன்கள் சேர்த்தனர். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.
சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக சாதிக்குமா இந்தியாவின் இளம் படை?
பந்து வீச்சில் இலங்கை அணி தரப்பில் தில்சன் மதுசங்கா, மஹீத் தீக்ஷனா, சமீகா கருணாரத்னே, தனஞ்ஜெயா டி சில்வா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கசுன் ரஜிதா, தில்சன் மதுஷங்கா.
முதல் முறையாக டி20ல் கால் பதிக்கும் சுப்மன் கில், ஷிவம் மாவி: டாஸ் வென்ற இலங்கை பவுலிங்!