Latest Videos

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு – ரிசர்வ் டேயிலும் மழைக்கு வாய்ப்பு!

By Rsiva kumarFirst Published Jun 28, 2024, 12:57 PM IST
Highlights

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியின் போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. தொடரை நடத்திய அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. கடைசியாக தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு வந்தன.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் கூட அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன. முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நேற்று இரவு நடைபெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய இந்தியா 171 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும், ஹர்திக் பாண்டியா 23 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய இங்கிலாந்து 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதில் அதிகபட்சமாஹ ஹாரி ஃப்ரூக் 25 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர் 23 ரன்களும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 21 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் குல்தீப் யாதவ் மற்றும் அக்‌ஷர் படேல் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பார்படோஸில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரீபியனில் பருவமழைக் காலம் என்பதால், அந்தப் பகுதி முழுவதும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

நாளையும், நாளை மறுநாளும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை முன்னறிவித்துள்ளது. மேலும், நாளை லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும், பலத்த காற்று வீசக் கூடும் என்று எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!