ஒடிசா ரயில் விபத்து: ஒரு நிமிடம் இரங்கல் தெரிவித்து, கறுப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!

By Rsiva kumar  |  First Published Jun 7, 2023, 4:08 PM IST

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் ஒரு நிமிடம் அமைதியாக இருந்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 278 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்திய வீராங்கனை சோனா சாண்டிலா தங்கம்: மொத்தமாக இந்தியா 8 பதக்கம் வென்றுள்ளது!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியோடு கையில் கறுப்பு பட்டை அணிந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் விளையாடி வருகிறனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் ரன் கணக்கை தொடங்கினர். இதில், உஸ்மான் கவாஜாவை சிராஜ் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். கவாஜா ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் IND vs AUS, முதல் முறையாக சாம்பியன்ஸ் வெல்லப் போவது யார்?

தற்போது வரையில் ஆஸ்திரேலியா 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறவில்லை.

இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா வீரர்கள்:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவென் ஸ்மித், டிராவிட் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான், ஸ்காட் போலந்து

ஆகாஷ் சோப்ராவின் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்கு இடமில்லை!ஆகாஷ் சோப்ராவின் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்கு இடமில்லை!

இரு அணிகளின் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் தங்களது 50 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகின்றனர். இதற்கு முன்னதாக ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

click me!