20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் IND vs AUS, முதல் முறையாக சாம்பியன்ஸ் வெல்லப் போவது யார்?

By Rsiva kumarFirst Published Jun 7, 2023, 3:05 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இங்கிலாந்தில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் WTC Final போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபியை கோட்டை விட்ட நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கண்டிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக ஐசிசி WTC டிராபியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகாஷ் சோப்ராவின் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்கு இடமில்லை!ஆகாஷ் சோப்ராவின் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்கு இடமில்லை!

இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா வீரர்கள்:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவென் ஸ்மித், டிராவிட் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான், ஸ்காட் போலந்து

50ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா: ஓவலில் சதம் அடித்த சாதனை மன்னன்!50ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா: ஓவலில் சதம் அடித்த சாதனை மன்னன்!

இரு அணிகளின் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் தங்களது 50 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகின்றனர். இதற்கு முன்னதாக ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், ஆஸ்திரேலியா கடைசியாக நடந்த ஓவல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதுவரையில் 104 போட்டிகள் ஓவல் மைதானத்தில் நடந்துள்ளது. இதில், 88 போட்டிகளில் டாஸ் வென்ற அணி தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த 88 போட்டிகளில் முதலில் ஆடிய அணி 38 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. 29 போட்டிகளில் பீல்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது.

Ind vs Aus, WTC 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடக்க காரணம்?Ind vs Aus, WTC 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடக்க காரணம்?

கடைசியாக நடந்த 9 போட்டிகளில் 5ல் முதலில் பீல்டிங் செய்த அணி 2ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. அதிகளவில் ரன்கள் சேர்க்கும் மைதானமாக ஓவல் மைதானம் திகழ்கிறது. லார்ட்ஸ், ஓல்ட் டிராஃபோர்ட், ஹெடிங்லி, டிரெண்ட் பிரிட்ஜ், எட்ஜ்பாஸ்டன் மற்றும் ரோஸ் பவுல் ஆகிய மைதானங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஓவல் மைதானம் அதிக ரன்கள் எடுக்கும் சுழுல் கொண்டுள்ளதாக விளங்குகிறது.

இதுதவிர பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அதாவது, ஒவ்வொரு 54 பந்துகள் அல்லது 30 ரன்களுக்கு இந்த மைதானத்தில் விக்கெட் விழுந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் முதல் விக்கெட்டை கைப்பற்றியிருக்கின்றனர்.

ஓவல் மைதானத்தில் இந்தியா அண்ட் ஆஸ்திரேலியா படைத்த சாதனைகள்!ஓவல் மைதானத்தில் இந்தியா அண்ட் ஆஸ்திரேலியா படைத்த சாதனைகள்!

ரோகித் சர்மா சாதனைகள்:

இதுவரையில் 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 83 இன்னிங்ஸ் விளையாடி 3379 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 9 சதம், ஒரு இரட்டை சதம், 14 அரைசதம் அடங்கும். இந்த ஓவல் மைதானத்தில் ரோகித் சர்மா 127 ரன்கள் எடுத்துள்ளார்.

ரோகித் சர்மா படைக்கும் சாதனைகள்:

இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலமாக ரோகித் சர்மா தனது 50ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர் சாதனையை படைப்பார். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 27 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 13,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதுவரையில் இந்தியா ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஷிப் டிராபியை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஷிப் டிராபியை கைப்பற்றியுள்ளது. முதல் முறையாக இரு அணிகளும் ஐசிசி உலக சாம்பியன்ஷிப் டிராபியை கைப்பற்றும் முனைப்பில் இன்று விளையாடுகின்றன.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் எத்தனை மணிக்கு ஆரம்பம்? எந்த சேனலில் பார்க்கலாம்? இன்னிங்ஸ் எப்போ முடியும்?இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் எத்தனை மணிக்கு ஆரம்பம்? எந்த சேனலில் பார்க்கலாம்? இன்னிங்ஸ் எப்போ முடியும்?

இந்தியாவின் சாதனை: ஓவல் மைதானம்

ஓவல் மைதானத்தில் இந்தியா விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில் 2ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. இதில், 7 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்ற் பெற்றது. இந்தப் போட்டியில் தான் ரோகித் சர்மா 2ஆவது இன்னிங்ஸில் 127 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி 50 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 57, 60, ரிஷப் பண்ட் 50, புஜாரா 61 ரன்னும் சேர்த்தனர்.

ஆஸ்திரேலியா சாதனை: ஓவல்

இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா விளையாடிய 34 போட்டிகளில் 7ல் வெற்றியும், 17ல் தோல்வியும் அடைந்துள்ளது. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Note: இங்கிலாந்து ஓவல் மைதானத்திலிருந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடர்பான அனைத்து செய்திகளையும் ஏசியாநெட் நியூஸ் தலைமை நிரூபர் டாக்டர் கிருஷ்ணா கிஷோர் தொகுத்து வழங்குகிறார். 

"நியூயார்க்கை தளமாகக் கொண்ட டாக்டர். கிருஷ்ண கிஷோர், அமெரிக்காவில் ஏசியாநெட் நியூஸ் தலைமை நிருபராக உள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றவர். இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் பல முக்கியமான கிரிக்கெட் தொடர்களை தொகுத்து வழங்கியவர். டாக்டர் கிஷோர் அமெரிக்காவில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அங்கீகாரம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது."

click me!