1 இல்ல, 2 இல்ல 95 முறை ஜெயித்த இந்தியா!

Published : Jan 13, 2023, 12:22 PM IST
1 இல்ல, 2 இல்ல 95 முறை ஜெயித்த இந்தியா!

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 95 முறை வெற்றி வாகை சூடியுள்ளது.  

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடியது. இதில், இந்தியா 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஈடான் கார்டன் மைதானத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 

ஒரு நாள் போட்டியில் அதிக முறை தோற்ற அணி என்ற சாதனையை படைத்த இலங்கை!

ஆனால், அந்த அணி 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சு தரப்பில் சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும், அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா ஓரளவு ரன்கள் சேர்த்தார். அவர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்‌ஷர் படேல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று ஆடிய கே எல் ராகுல் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிப்பு!

குல்தீப் யாதவ் வின்னிங் ஷாட் அடித்து கொடுக்க இந்திய அணி 43,2 ஓவர்களில் 6 விக்கெட்டு இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதோடு, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்று கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 15 ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கிறது. 

எஸ்ஏ20:போட்டியை வேடிக்கை பார்த்த காவ்யா மாறன்: பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி அபார வெற்றி!

இந்த நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடண்ட ஒரு நாள் போட்டிகளில் இதுவரையில் இந்தியா 95 முறை வெற்றி பெற்றுள்ளது. அதாவது இலங்கை 95 முறை தோல்வியை தழுவியுள்ளது. இதே போன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகளில் இலங்கை 19 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. அதுமட்டுமின்றி இது வரையில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை தோற்ற அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது. இதுவரையில் இலங்கை அணி 437 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதே போன்று இந்தியாவும் 436 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. பாகிஸ்தான் 419 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரோன் பிசினஸில் இறங்கிய தோனி..! "Droni" என்ற கண்காணிப்பு ட்ரோன் அறிமுகம்

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!
MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..