
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, பிப்ரவரி 23 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி 2025 குரூப் ஏ ஆட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ரன்களை கடந்தார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்காராவுக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கோலி 287 இன்னிங்ஸ்களில் 14000 ரன்களைத் தாண்டி, அதிவேகமாக இந்தச் சாதனையைப் புரிந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 2006ஆம் ஆண்டில் 350 இன்னிங்சில் 14 ஆயிரம் ரன்களை எட்டியிருந்தார். இலங்கையின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா 2015ஆம் ஆண்டு 378 போட்டிகளில் இந்த மைல்கல்லை அடைந்தார்.
அட! இப்படி ஒரு மோசமான சாதனையா? டாஸில் கசப்பான சாதனை படைத்த இந்தியா!
ஒருநாள் போட்டியில் சாதனை மேல் சாதனை படைத்து ரன் மிஷின் என்று பெயர் எடுத்துள்ள விராட் கோலி இதுவரை 287 ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள், 74 அரைசதங்களை விளாசி இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யும் இந்தப் போட்டியில் இந்திய அணி 242 ரன்கள் இலக்கை சேஸ் செய்து விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா 20 ரன்களிலும் சுப்மன் கில் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து விளையாடி வருகிறார்.
Mohammed Shami: கால் வலியால் அவதிப்பட்ட முகமது ஷமி! முழு உடற்தகுதி பெறவில்லையா?