வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 308 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டி உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியாவின் டாப் பேட்ஸ்மேன்கள்களில் ஜெஷ்வால் மட்டும் அரை சதம் கடந்தார் மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
இந்தியாவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையில் 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின், ஜடேஜா இணை இந்தியாவை சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 199 ரன்கள் சேர்த்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
ஆட்டம் குளோஸ்: 149 ரன்களுக்கு நடையை கட்டிய வங்கதேசம் - பும்ரா அபாரம்
அஸ்வின் 113 ரன்களுக்கும், ஜடேஜா 86 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் இந்தியா 376 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறினர். முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 149 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
Ind Vs Ban: யாரு ஏரியால யாரு சீன போடுறது? வங்கதேசத்தை பொளந்துகட்டும் அஸ்வின், ஜடேஜா
227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இந்தியாவில் கேப்டன் ரோகித் ஷர்மா 5 ரன்களிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஷ்வால் 10 ரன்களுக்கும், விராட் கோலி 17 ரன்களுக்கும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். தற்போது சுப்மன் கில் (33), ரிஷப் பண்ட் (12) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாட் ஆட்ட நேர முடிவில் இந்தியா 308 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் உள்ளது.