ICC WTC புள்ளி பட்டியல்: நியூசிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பின் இந்தியாவின் நிலை என்ன..?

Published : Dec 06, 2021, 03:53 PM ISTUpdated : Dec 07, 2021, 07:08 AM IST
ICC WTC புள்ளி பட்டியல்: நியூசிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பின் இந்தியாவின் நிலை என்ன..?

சுருக்கம்

இந்தியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடருக்கு பின் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.  

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டைட்டிலை நியூசிலாந்து அணி வென்றது. 2021 - 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர்கள் நடந்துவருகின்றன. 2023ம் ஆண்டு ஃபைனல் நடக்கவுள்ளது. தற்போது நடந்துவரும் டெஸ்ட் தொடர்கள் அனைத்தும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து அந்த தொடரை வென்றதையடுத்து, 100% வெற்றி விகிதத்துடன் இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது.

66.66 வெற்றி சதவிகிதத்துடன் பாகிஸ்தான் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவானாலும், 2வது டெஸ்ட்டில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3ம் இடத்தில் உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றிருந்தாலும், 58.33 வெற்றி சதவிகிதத்துடன் இந்திய அணி தொடர்ந்து 3ம் இடத்தில் நீடிக்கிறது. எனவே இந்தியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் புள்ளி பட்டியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

29.17 சதவிகிதத்துடன் 4ம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி, ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இதுவரை ஒரு போட்டி கூட ஆடவில்லை. ஆஷஸ் தொடர்தான் ஆஸ்திரேலிய அணியின் முதல் தொடர். எனவே ஆஷஸ் தொடர் புள்ளி பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. இளம் வீரர் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன்!
இந்தியாவில் விளையாட முடியாது.. வங்கதேசம் திட்டவட்டம்.. 'ஆப்பு' வைக்கும் ஐசிசி.. அதிரடி மூவ்!