டி20 உலக கோப்பை குறித்த முக்கியமான தகவலை அறிவிக்கிறது ஐசிசி.. ஜனவரி 21ம் தேதி முக்கிய அறிவிப்பு

Published : Jan 14, 2022, 09:39 PM IST
டி20 உலக கோப்பை குறித்த முக்கியமான தகவலை அறிவிக்கிறது ஐசிசி.. ஜனவரி 21ம் தேதி முக்கிய அறிவிப்பு

சுருக்கம்

2022ம் ஆண்டு(நடப்பாண்டு) நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான முழு போட்டி அட்டவணை வரும் 21ம் தேதி வெளியாகிறது.  

2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் தொடங்கப்பட்டது. இதுவரை 7 முறை டி20 உலக கோப்பை தொடர் நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட வேண்டிய டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது.

2022ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ம் தேதி நவம்பர் 13ம் தேதி வரை டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு, பிரிஸ்பேன், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி, கீலாங் ஆகிய நகரங்களில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடக்கின்றன. நவம்பர் 13ம் தேதி இறுதிப்போட்டி மெல்போர்னில் நடக்கிறது. நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முறையே 2 அரையிறுதி போட்டிகள் சிட்னி மற்றும் அடிலெய்டில் நடக்கின்றன.

எந்தெந்த நாட்களில் எந்தெந்த போட்டிகள் எங்கு நடக்கின்றன என்ற முழு போட்டி அட்டவணை வரும் 21ம் தேதி வெளியிடப்படுகிறது. பிப்ரவரி 7ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. எனவே ரசிகர்கள், தாங்கள் எந்த போட்டிகளை பார்க்க விரும்புகின்றனரோ அந்த போட்டிகளுக்கான டிக்கெட்டை பெற முடியும்.
 

PREV
click me!

Recommended Stories

காதலியை கரம் பிடிக்கும் ஷிகர் தவான்.. 2வது திருமணம்.. யார் இந்த சோஃபி ஷைன்?
IND vs NZ: தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!