ICC WTC: தொடர் தோல்விகள்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் கீழே சென்ற இந்தியா

Published : Jan 14, 2022, 08:59 PM IST
ICC WTC: தொடர் தோல்விகள்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் கீழே சென்ற இந்தியா

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4ம் இடத்திலிருந்து 5ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டது.  

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டைட்டிலை நியூசிலாந்து அணி வென்றது. 2019 - 2021ல் நடத்தப்பட்ட முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து வென்றது. 2021 - 2023 வரையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர்கள் நடந்துவருகின்றன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில், வெறும் இரண்டே டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி அந்த இரண்டிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி 100 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4 போட்டிகளில் 3ல் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஒரு போட்டி டிரா ஆனது. 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 83.33 சதவிகித வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி 75 சதவிகிதத்துடன் 3ம் இடத்தில் உள்ளது. 4ம் இடத்தில் இருந்த இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ச்சியாக 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, 49.07 சதவிகிதத்துடன் 5ம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக 2 டெஸ்ட்டில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 66.66 வெற்றி சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?
3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்