
இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி முடிந்ததும், ஐசிசி டெஸ்ட் தரவரிசை அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அபாரமாக பேட்டிங் ஆடி, இந்த காலக்கட்டத்தில் மட்டும் 11 சதங்களை விளாசி மலை மலையாக ஸ்கோர் செய்துவரும் ஜோ ரூட் 923 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க - ENG vs IND: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்! ஒரு இடத்திற்கு 3 வீரர்கள் போட்டா போட்டி
ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் முறையே 2 மற்றும் 3ம் இடங்களில் உள்ளனர். இந்திய அணிக்காக டெஸ்ட்டில் அபாரமாக ஆடிவரும் ரிஷப் பண்ட் 5ம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமும், 2வது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்த ரிஷப் பண்ட், தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருவதால் 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2வது முறையாக நடந்துவரும் நிலையில், இதில் இதுவரை 1218 ரன்களை குவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக அபாரமாக ஆடி ரன்களை குவித்த பேர்ஸ்டோ, இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்தார். இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 10ம் இடத்திற்கு முன்னேறியுள்ள பேர்ஸ்டோ, அவரது கெரியர் பெஸ்ட் டெஸ்ட் ரேங்கிங்கை எட்டியுள்ளார்.
இதையும் படிங்க - WI vs IND: ODI தொடருக்கான இந்திய அணிஅறிவிப்பு; தவான் கேப்டன்!பெரிய தலைகளுக்கு ஓய்வு;இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்த விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காமல் திணறிவருகிறார். தொடர்ச்சியாக சொதப்பிவரும் கோலி, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 13ம் இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.