icc cricket: icc new rules 2022: இனிமேல், எச்சில் தொட்டு பந்தை பாலிஷ் செய்யக்கூடாது: நிரந்தர தடை விதித்த ஐசிசி

By Pothy Raj  |  First Published Sep 20, 2022, 2:39 PM IST

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்கள் யாரும் பந்தை பாலிஷ் செய்வதற்காக எச்சில் தொட்டு தேய்ப்பது எனும் முறை நிரந்திரமாகத் தடை செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.


சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்கள் யாரும் பந்தை பாலிஷ் செய்வதற்காக எச்சில் தொட்டு தேய்ப்பது எனும் முறை நிரந்திரமாகத் தடை செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறை, அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்த முறை நடைமுறைக்கு வரும். 

Tap to resize

Latest Videos

undefined

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை பூவம்மாவுக்கு 2 ஆண்டுகள் தடை


வீரர்கள் தங்கள் வியர்வை அல்லது துணி மூலம் மட்டுமே பந்தை துடைத்து பாலிஷ் செய்ய முடியும். 
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிமிட்டி,  ஐசிசி நிர்வாகக்குழுவுக்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்துரைகளில் முக்கியமனது பந்தை எச்சில் தொட்டு பாலிஷ் செய்வதாகும்.

டி20 உலகக் கோப்பை: நியூஸிலாந்து அணி அறிவிப்பு: மூத்த வீரருக்கு 7வதுமுறை இடம்
கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் எச்சில் மூலம் வைரஸ் பரவும் என்பதால், அந்த நேரத்தில் விளையாடப்பட்ட அனைத்துப் போட்டிகளிலும் வீர்கள் எச்சில் தொட்டு பந்தை பாலிஷ் செய்யும் முறை தடை செய்யப்பட்டது.

இதில் லண்டனில் உள்ள எம்சிசி கிரிக்கெட் கிளப் கடந்த மார்ச் மாதம் பந்தை எச்சில் தொட்டு பாலிஷ் செய்யும் முறையை நிரந்தரமாக தடை செய்து அறிவித்தது. இப்போது கொரோனா பரவல் பெருவாரியாகக் குறைந்துவிட்டபோதிலும், பந்தை எச்சில் தொட்டு பாலிஷ் செய்வதை நிரந்தரமாகத் தடை செய்து ஐசிசி அறிவித்துள்ளது.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்தார் பஜ்ரங் பூனியா

இதன்படி அனைத்து சர்வதேச ஒருநாள், டி20, மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் யாரும் பந்தை எச்சில் தொட்டு பாலிஷ் செய்யக்கூடாது.இந்த விதிமுறை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே ஐபிஎல் டி20 தொடரிலும் இந்த நடைமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!