பாகிஸ்தானை வேரோடு சாய்த்த இந்திய அணி! 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Published : Feb 23, 2025, 09:56 PM ISTUpdated : Feb 23, 2025, 11:15 PM IST
பாகிஸ்தானை வேரோடு சாய்த்த இந்திய அணி! 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சுருக்கம்

India vs Pakistan in ICC Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த விராட் கோலி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

241 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 42.3 ஓவர்களிலே 4 விக்கெடுகளை மட்டும் இழந்து 244 ரன் எடுத்து வெற்றி வாகை சூடியது. நட்சத்திர வீரர் விராட் கோலி 111 பந்துகளில் தனது 51வது சதத்தை பதிவு செய்தார். குஷ்தில் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதத்தை பூர்த்தி செய்த கோலி ஆட்டத்தையும் வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

கோலிக்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் சென்சுரி அடித்த தொடக்க வீரர் சுப்மன் கில் இந்தப் போட்டியில் 46 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரோகித் (20), பாண்டியா (8), அக்சர் படேல் (3*) ரன்கள் எடுத்தனர்.

விராட் கோலி புதிய சாதனை! அதிவேகமாக 14,000 ரன்களைக் கடந்து அசத்தல்!

பாகிஸ்தான் சார்பில் ஷகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளை எடுத்தார். அப்ரார் அகமது, குஷ்தில் ஷா தலா ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றினர். பாகிஸ்தான் அணியின் பவுலர்கள் சோபிக்காத நிலையில், பீல்டிங்கும் மோசமாக இருந்தது. ஈசியான கேட்ச்களை கோட்டை விட்டதும் அந்த அணிக்கு பின்னடவை ஏற்படுத்தியது.

முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே சறுக்கலைச் சந்தித்தது. இமாம் உல் ஹக் 10 ரன்னிலும் பாபர் அசாம் 23 ரன்னிலும் நடையைக் கட்டினர். பின்னர் கேப்டன் ரிஸ்வானும் - ஷகீலும் நிதானமாக ஆடி பாகிஸ்தான் அணியை ஆரம்பக்கட்ட சரிவிலிருந்து மீட்டனர்.

ஆனால், 46 ரன்னில் ரிஸ்வான் அவுட்டானதும் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழத் தொடங்கின. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷகீல் பாண்டியா வீசிய பவுன்சரை சிக்சர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களில் குஷ்தில் சற்று போராடி 38 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வந்த வேகத்தில் பெவிலியன் சென்றதால் பாகிஸ்தான் அணி 49.4 ஓவரிகளில் 241 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகிவிட்டது.

இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 3 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார். பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்து திருப்புமுனை ஏற்படுத்தினார். ஹர்ஷித் ராணா, அக்ஸர் படேல், ஜடேஜா மூவரும் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

சச்சினின் சாதனையை சைலண்டாக முறியடித்த ரோஹித் சர்மா

PREV
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?