டி20 உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்! எந்தெந்த பிரிவில் எந்தெந்த அணிகள்? ஐசிசி வெளியிட்ட முழு பட்டியல்

By karthikeyan VFirst Published Jul 16, 2021, 4:52 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்த உலக கோப்பை தொடரை பிசிசிஐ நடத்துகிறது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான அணிகளை 2 பிரிவுகளாக பிரித்து, எந்தெந்த பிரிவில் எந்தெந்த அணிகள் என்ற விவரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகளும் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்ற அணிகள். எஞ்சிய 4 இடங்களை பிடிக்க 8 அணிகள் மோதுகின்றன. அந்த 8 அணிகளும் முதல் சுற்றில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய 4 அணிகளும், பி பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய 4 அணிகளும் இடம்பெற்றுள்ளன.

சூப்பர் 12 சுற்றுக்கான அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்த விவரத்தை பார்ப்போம்.

க்ரூப் 1 - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஏ பிரிவின் வின்னர், பி பிரிவின் ரன்னர்.

க்ரூப் 2 - இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தா, பி பிரிவின் வின்னர், ஏ பிரிவின் ரன்னர்.

இருதரப்பு தொடர்களில் ஆடாமல், ஐசிசி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதால் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!