எப்போதும் மாஸ்க் போட்டுகிட்டே இருக்குறது எல்லாம் முடியாத காரியம்! ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தாதா

By karthikeyan VFirst Published Jul 16, 2021, 3:10 PM IST
Highlights

எப்போதுமே மாஸ்க் அணிந்துகொண்டே இருக்கமுடியாது என்று ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குரல் கொடுத்துள்ளார்.
 

இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடிவிட்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்திலேயே உள்ளது.

பயோ பபுள் விதிகளை பின்பற்றி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் வீரர்கள் உள்ளனர். ஆனாலும் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டுக்கு கடந்த 8ம் தேதி கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட ரிஷப், கிட்டத்தட்ட அவரது குவாரண்டினை முடித்துவிட்டார். அவருக்கு கொரோனா உறுதியானதால், இந்திய அணியுடன் அவர் துர்ஹாமிற்கு செல்லவில்லை.

ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா உறுதியானதையடுத்து, யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியை காண சென்ற ரிஷப் பண்ட், மாஸ்க் அணியாமல் ரசிகருடன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. மாஸ்க் அணியாமல் ரசிகர் கூட்டத்தில் ரிஷப் பண்ட் இருந்ததுதான் காரணம் என்றும் பேசப்பட்டது.
 

ஆனால் அதனால் ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும், அதேவேளையில் இந்திய வீரர்கள் யூரோ கோப்பை மற்றும் விம்பிள்டன் ஆகிய போட்டிகளை தவிர்க்க வேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி. இதுகுறித்து பேசியுள்ள சவுரவ் கங்குலி, இங்கிலாந்தில் நடக்கும் விளையாட்டு போட்டிகளை நேரில் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் விடுமுறையில் உள்ளனர். எனவே அந்த போட்டிகளை பார்த்திருக்கலாம். அதுமட்டுமல்லாது, எப்போதுமே மாஸ்க் அணிந்துகொண்டே இருப்பது என்பது முடியாத காரியம் என்று ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கங்குலி.
 

click me!