டி20 உலக கோப்பை: தயாரிப்புகள் எப்படி இருக்கு..? ஓமன், துபாய்க்கு பறக்கும் பிசிசிஐ அதிகாரிகள்

By karthikeyan VFirst Published Jul 15, 2021, 11:13 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான தயாரிப்புகள் எப்படி நடந்துகொண்டிருக்கின்றன என்பதை ஆய்வு செய்யவும், ஆலோசிக்கவும் பிசிசிஐ அதிகாரிகள் ஓமன் மற்றும் துபாய்க்கு செல்கின்றனர்.
 

இந்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடப்பதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததன் விளைவாக, ஓமன்  மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

ஓபன், துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடக்கின்றன. அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை டி20 உலக கோப்பை போட்டிகள் நடக்கின்றன.

டி20 உலக கோப்பை இந்தியாவிலிருந்து ஓமன் மற்றும் அமீரகத்திற்கு இடம் மாற்றப்பட்டாலும், இந்த தொடரை நடத்துவது பிசிசிஐ தான். எனவே அந்தவகையில், டி20 உலக கோப்பைக்கான தயாரிப்புகள் எப்படி நடந்துகொண்டிருக்கின்றன, தகுதிச்சுற்று போட்டிகளில் மோதும் அணிகளின் பயண திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யவும், ஆலோசிக்கவும் பிசிசிஐ அதிகாரிகள் ஓமன் மற்றும் துபாய்க்கு செல்கின்றனர்.

ஜூலை 16 ஓமனிலும், ஜூலை 17 துபாயிலும் ஆய்வு செய்கின்றனர் பிசிசிஐ அதிகாரிகள். ஜூலை 17 துபாயில் ஐசிசியுடனான ஆலோசனை கூட்டத்திலும் கலந்துகொள்கின்றனர். அந்த கூட்டத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர். 

அந்த ஆலோசனை கூட்டத்தில், அணிகளின் தங்குமிடம், பயோ பபுள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. டி20 உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடக்காவிட்டாலும், அதை நடத்தும் பொறுப்பை பெற்றுள்ள பிசிசிஐ, பாதுகாப்பான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறது.
 

click me!