அவங்க 2 பேரையும் பென்ச்சில் உட்காரவைத்தது பெரிய தவறு..! ஆஸி., அணி தேர்வை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்

By karthikeyan V  |  First Published Feb 10, 2023, 8:09 PM IST

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆஸி., முன்னாள் வீரர்  இயன் ஹீலி.
 


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்துவருகிறது. இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்தது ஆஸ்திரேலிய அணி. நேதன் லயன், அஷ்டான் அகர், மிட்செல் ஸ்வெப்சன் மற்றும் டாட் மர்ஃபி ஆகிய 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் 2 ஸ்பின்னர்களை மட்டுமே ஆடவைத்தது.

இந்திய அணி முதல் டெஸ்ட்டில் அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய நிலையில், ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளம் என்று தெரிந்தும் கூட, அணி காம்பினேஷனில் சமரசம் செய்யமுடியாததால், 2 ஸ்பின்னர்களுடன் மட்டுமே ஆடியது. நேதன் லயன் சீனியர் ஸ்பின்னர்; மற்றொருவரான டாட் மர்ஃபி அறிமுக வீரர். சரியான காம்பினேஷனுடன் ஆடாததன் பலனை அனுபவித்துவருகிறது ஆஸ்திரேலிய அணி.

Tap to resize

Latest Videos

IND vs AUS: நாக்பூர் ஆடுகளத்தை நக்கலடித்த மார்க் வாக்.. தக்க பதிலடி கொடுத்து வாயை அடைத்த இர்ஃபான் பதான்

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியை ஜடேஜாவும் அஷ்வினும் சேர்ந்து 177 ரன்களுக்கு சுருட்டிவிட்டனர். ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்த அந்த அனி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லபுஷேன் அதிகபட்சமாக 49 ரன்கள் அடித்தார். ஸ்மித் 37 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிவருகிறது. ராகுல் (20), புஜாரா(7), கோலி(12), சூர்யகுமார் யாதவ்(8), கேஎஸ் பரத் (8) ஆகியோர் சரியாக ஆடவில்லை. ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து 120 ரன்களை குவித்தார். ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து ஆடிவருகின்றனர். 2ம் நாள் ஆட்ட  முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் அடித்துள்ளது.

இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்த முன்னிலை இன்னும் அதிகரிக்கும் என்பதால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. ஆஸி., அணியில் அறிமுக ஸ்பின்னர் டாட் மர்ஃபி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதேவேளையில், அந்த அணி பெரிதும் நம்பியிருந்த நேதன் லயன் சோபிக்கவில்லை. நேதன் லயன் பவுலிங் எடுபடாத பட்சத்தில் இந்தியாவில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி பெரும் சந்தேகம் தான்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி தேர்வை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் இயன் ஹீலி. இதுகுறித்து பேசியுள்ள இயன் ஹீலி, ஆஸ்திரேலிய அணி தேர்வு தவறானது. டாட் மர்ஃபி நன்றாக பந்துவீசக்கூடியவர் தான். நேதன் லயனை போன்ற பவுலிங் ஆக்‌ஷனை கொண்டிருக்கிறார். அதனால் இந்திய வீரர்கள் அவரது பவுலிங்கை முன்கூட்டியே கையிலிருந்தே கணித்துவிடுகின்றனர். அனுபவம் வாய்ந்த ஸ்பின்னரான அஷ்டான் அகர் மற்றும் மிட்செல் ஸ்வெப்சன் ஆகிய இருவரையும் ஆடும் லெவனில் எடுக்காதது பெரிய தவறு என்று தெரிவித்துள்ளார்.

அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட்.. அபார சாதனை படைத்த ஆஸி., ஸ்பின்னர் டாட் மர்ஃபி..! லெஜண்ட்ஸ் பட்டியலில் இணைந்தார்

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், டாட் மர்ஃபி, போலந்த்.
 

click me!