ஸ்மித்தை மீண்டும் ஆஸி., அணியின் கேப்டனாக நியமிக்கலாமா? வேண்டாமா? இயன் சேப்பல் அதிரடி

By karthikeyan VFirst Published May 17, 2021, 10:08 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மீண்டும் ஸ்டீவ் ஸ்மித்தை நியமிப்பது குறித்து இயன் சேப்பல் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 

ஆஸ்திரேலிய டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் இருந்துவந்த நிலையில், 2018ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்டிய விவகாரத்தில், கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. 

அதனால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சி பொறுப்பை இழந்தார். ஒருநாள் மற்றும் டி20 ஆஸ்திரேலிய அணிகளின் கேப்டனாக ஆரோன் ஃபின்ச்சும், டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தான் இப்போது வரை கேப்டன்களாக செயல்பட்டுவருகின்றனர். 

டிம் பெய்ன்(டெஸ்ட்), ஆரோன் ஃபின்ச்(ஒருநாள், டி20) ஆகிய இருவரின் கேப்டன்சியுமே சிறப்பாக எல்லாம் இல்லை. மேலும் இவர்களின் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணி எதையும் பெரிதாக சாதிக்கவும் இல்லை.

எனவே கேப்டன்சி மாற்றம் குறித்த விவாதங்களும் கருத்துகளும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே உலாவருகின்றன. ஸ்மித்தையே மீண்டும் கேப்டனாக்கலாம் என்ற கருத்துகள் கூட எழுந்தன. 

இந்நிலையில், இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள ஆஸி., முன்னாள் கேப்டன் இயன் சேப்பல், ஸ்மித்தை தாண்டி யோசித்தாக வேண்டும். என்னை பொறுத்தமட்டில் ஸ்மித்தை மீண்டும் கேப்டனாக்குவது, அணியை பின்னோக்கி இழுத்து செல்ல வழிவகுக்கும். எனவே அவரை கடந்து யோசித்தாக வேண்டும் என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
 

click me!