ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அவரோட பவுலிங் தான் கடும் சவாலா இருக்கும்..! ஆஸி., முன்னாள் கேப்டன் எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Jun 8, 2020, 8:55 PM IST
Highlights

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் எந்த இந்திய பவுலர் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் சவாலாக இருப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். 
 

இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் ஆடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2018 - 2019ல் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதல் முறையாக 2018-2019 டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. 

இந்நிலையில், அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறது. கடந்த முறை ஸ்மித் - வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தி தொடரை வென்றுவிட்டது. ஆனால் இந்த முறை, ஸ்மித் - வார்னர் மட்டுமல்லாது, லபுஷேன் என்ற மற்றொரு மிகச்சிறந்த வீரரும் இணைந்துள்ளார். எனவே வரப்போகும் ஆஸ்திரேலிய தொடர் இந்தியாவிற்கு கடும் சவாலாக இருக்கும். 

இந்நிலையில், அந்த தொடர் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் குல்தீப் யாதவின் ரிஸ்ட் ஸ்பின் அருமையாக ஒர்க் அவுட் ஆகும். எனவே ஆஸ்திரேலிய வீரர்களுக்கு, குல்தீப் யாதவின் ரிஸ்ட் ஸ்பின் தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.

இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வின், ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகிய சிறந்த வீரர்கள் இருப்பதால், ஸ்பின்னரை தேர்வு செய்வது இந்திய அணி தேர்வாளர்களுக்கு கடும் சவாலாக இருக்கும். அதையும் மீறி குல்தீப்பை அணியில் எடுப்பது துணிச்சலான முடிவாக இருக்கும் என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ், இதுவரை 6  டெஸ்ட் போட்டிகளில் ஆடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் குல்தீப் யாதவ். இந்திய அணி, பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் என மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டையும் அஷ்வின் - ஜடேஜா - குல்தீப் என சிறந்த ஸ்பின் பவுலர்களையும் பெற்றுள்ளது. யாரை எடுப்பது, யாரை விடுப்பது என்று தெரியாத அளவிற்கு இந்திய அணியில் சிறந்த பவுலர்கள் நிறைய உள்ளனர். 
 

click me!