உணர்ச்சிவசப்பட்டு ஹெல்மெட்டை தூக்கி எறிந்தது எனது தவறு தான் – ஆவேஷ் கான்!

Published : Jun 19, 2023, 06:58 PM IST
உணர்ச்சிவசப்பட்டு ஹெல்மெட்டை தூக்கி எறிந்தது எனது தவறு தான் – ஆவேஷ் கான்!

சுருக்கம்

ஐபிஎல் தொடரின் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது வெற்றிக்கு பிறகு ஹெல்மெட்டை தூக்கி எறிந்தது எனது தவறுதான் என்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வீரர் ஆவேஷ் கான் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் ஆடிய ஆர்சிபி அணி 212 ரன்கள் குவித்தது.

உலகக் கோப்பை வில்வித்தையில் 3ஆவது முறையாக தங்கம் வென்ற இந்திய வீரர் அபிஷேக் வர்மா!

பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி கட்டத்தில் 2 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்டது. அப்போது 5ஆவது பந்தில் உனத்கட் ஆட்டமிழந்தார். கடைசியில் ஆவேஷ் கான் களமிறங்கினார். கடைசி பந்தில் பைஸ் முறையில் ஒரு ரன் கிடைக்க, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுத்து போட்ட பென் ஸ்டோக்ஸ்; தனி ஒருவனாக போராடிய உஸ்மான் கவாஜா: ஆஸி, 386க்கு ஆல் அவுட்!

வெற்றி பெற்ற உற்சாகத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வீரர் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை தூக்கி எறிந்தார். இதையடுத்து ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  ஆனால், அவர் தூக்கி எறிந்த ஹெல்மெட் நிக்கோலஸ் பூரன் என்று தெரிய வந்தது. இது குறித்து ஆவேஷ் கான் கூறியிருப்பதாவது: அச்சம்பவத்திற்கு பிறகு எனக்கு மெசேஜ் வந்து கொண்டே இருந்தது. பலரும் என்னை கிண்டல் செய்தார்கள்.

ருதுராஜ் கெய்க்வாட் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்!

அதன் பின்னர் நான் ஹெல்மெட்டை தூக்கி எறிந்திருக்க கூடாது என்பதை நான் உணர்ந்தேன். ஆர்சிபி அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் நான் அதிகளவில் உணர்ச்சிவசப்பட்டேன். அதன் பிறகு தான் நான் எனது தவறை உணர்ந்தேன். கடந்த சீசன்களுடன் ஒப்பிடுகையில் இந்த சீசன் எனக்கு சிறப்பாக இருந்தது. பவர்பிளேயில் 4 அல்லது 5 ஓவர்கள் பந்து வீசுவேன். டெத் ஓவர்களிலும் பந்து வீசுவதற்கு நான் அழைக்கப்படுவேன்.

IPL 2023: ஹெல்மெட்டை தூக்கி எறிந்த ஆவேஷ் கானுக்கு லெவல் 1 நடவடிக்கை; டூப்ளெசிஸ்க்கு ரூ.12 லட்சம் ஃபைன்!

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை என்னுள் உள்ளது. ஆனால், அதெல்லாம் தேர்வுக்குழு கைகளில் தான் உள்ளது. பொதுவாகவே கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையானது ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. ஐபிஎல் தொடரில் நான் என்னென்ன தவறுகள் செய்தேனோ அதையெல்லாம் நான் வீடியோ மூலமாக தெரிந்து கொண்டு எனது தவறூகளை திருத்திக் கொண்டு வருகிறேன். மேலும், அதிலிருந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!