இந்த 3 அணிகளில் ஒன்று தான் கண்டிப்பாக டி20 உலக கோப்பையை வெல்லும்..! ஹெர்ஷல் கிப்ஸ் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 13, 2021, 5:28 PM IST
Highlights

டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் மிகத்தீவிரமாக தயாராகிவருகின்றன.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்று, கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. அந்த அணியில் கெய்ல், பொல்லார்டு, ட்வைன் பிராவோ, எவின் லூயிஸ் என டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் பலரையும் கொண்ட அணி வெஸ்ட் இண்டீஸ் என்பதால், அந்த அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 கிரிக்கெட்டில் சிறந்த அணிகள் என்பது மட்டுமல்லாது, டி20 உலக கோப்பை நடக்கவுள்ள ஐக்கிய அரபு அமீரக கண்டிஷனை நன்கு அறிந்த அணிகள். அந்த வகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. இங்கிலாந்து அணியும் வலுவான அணியாக உள்ளது.

எனவே இந்த டி20 உலக கோப்பை தொடர் கடும் போட்டியாக அமையும். அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் அதேவேளையில், பல முன்னாள் வீரர்கள் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், இதுகுறித்து பேசியுள்ள தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஹெர்ஷல் கிப்ஸ், இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளதாக ஹெர்ஷல் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.
 

click me!